26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CorporationTweetsViral

மெட்ரோ பணிகளுக்காக நாளை சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் என உங்களுக்கு தெரியுமா ?

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
மெட்ரோ இரயில் பணிகளால் இருவேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள
போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டு வருகின்ற 12.11.2022 முதல் ஒரு வாரகாலத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதையிலிருந்து மாற்றப்பட்டு
பனகல் பூங்காவிலிருந்து மா.போ.சி. க்கு செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்காவிற்கு செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கட்நாராயணசாலை வழியாக உஸ்மான் சாலை (பனகல்பார்க்) அடையலாம்.

உஸ்மான் சாலையில் இருந்து பாஷியம் சாலை வழியாக போத்தீஸ்ஸிற்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தியாகராய சாலைமற்றும் தணிகாசலம் சாலை வழியாக திருப்பிவிடப்படும்..

See also  கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - காவல்துறை கேட்கும் 12 கேள்விகள் ?

பர்கிட்சாலையில் இருந்து வரும் மாநகா பேருந்துகள் தணிகாசலம் சாலை
வழியாக செல்ல தடைசெய்யப்பபட்டு, சிவஞானம் சாலை, தியாகராயசாலை வழியாக திருப்பி விடப்படும்.

வெங்கடநாராயணா சாலை -நந்தனம் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

வெங்கடநாராயணா சாலை நந்தனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் பின் வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பர்கிட் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் வெங்கடநாராயணா சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது.

வாகனங்கள் ஹிந்தி பீரசார சபா தெரு, சௌத் போக் சாலை, மா.போ,சி.சந்திப்பு வந்து அண்ணா சாலையை அடையலாம்.

தி.நகர் மேட்லியில் இருந்து பர்கிட் சாலை வழியாக அண்ணாசாலைக்கு வெங்கடநாராயணா
சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்புச் சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.

See also  நம்பர் பிளேட் இல்லாத காரை ஓட்டி வந்த டி.டி.எஃப் வாசன்! - போலீசாரிடம் சிக்கியதால் பரபரப்பு!

நந்தனம் சந்திப்பிலிருந்து வெங்கடநாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பனகல் பூங்கா வரை வழக்கம் போல் செல்லலாம்.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஏற்கனவே கடந்த மூன்றாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தற்போது 12ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts