சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எஸ்.ஐ.பி ப்ரோடுஜி எனப்படும் தேசிய எஸ்.ஐ.பி அபாகஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை இஸ்ரோ மையத்தின் சதீஷ் தவான் ஏவுதலத்தின் இயக்குனர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
மேலும்,பிற்பகல் அமர்வுக்கு சென்னை ஐஐடியின் கணித துறை தலைவர் பேராசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
இந்த போட்டியில் அபாகஸ்,பெருக்கல், விசுவல் எண்கணிதம் உள்ளிட்ட
300 கணித கேள்விகளை மாணவர்கள் 11 நிமிடங்களில் தீர்க்க முயற்சித்தனர்.
இந்த போட்டியில் சென்னை மட்டுமல்லாது இந்தியா முழுவதிலிருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.