27.5 C
Tamil Nadu
28 May, 2023
Uncategorized

எடப்பாடி பழனிச்சாமி மதுரையை தாண்டி வரமாட்டார் ?

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:

100 யூனிட் இலவசம் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மா எனவும், முதல்வரிடம் செந்தில் பாலாஜி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.ஏழைகளின் வயிற்றில் அடிப்பது ஆராய்ச்சியாக ஏற்று கொள்ள முடியாது.இனி வரும் காலங்களில் கணவன் – மனைவி இணைய கூட ஆதார் கார்டு கேட்பார்கள் போல என்று விமர்சித்தார்.செந்தில் பாலாஜி திராவிட ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்றார்

அம்மாவை மருத்துவமனையில் சேர்த்த 34வது நாள் மேல்சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.ஆனால் யாரும் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. தற்போது திடீரென்று கோவை செலவராஜ் ஏன் அப்போலோ மருத்துவமனை பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை.ஓபிஎஸ்,சின்னம்மா, டிடிவி தினகரன் மூவரும் நேரம் வரும்போது ஒன்று சேருவார்கள் எனவும்,பல்வேறு கட்சிகளின் நபர்கள் ஒன்று சேர்ந்தாலும் கூட துரோகி எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி யாரும் செல்ல மாட்டார்கள் என தெரிவித்தார்.

See also  மதுரையில் குடிநீர் நிறுத்தம்-மாநகராட்சி அறிவிப்பு

மதுரையை தாண்டி எடப்பாடி பழனிசாமி வரமாட்டார்..ஏனென்றால் அவ்வளவு பயம்…தென் மாவட்ட மக்கள் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டார்கள்.மீண்டும் திராவிட இயக்கத்தை மீட்க கூடிய ஒரே தலைவன் ஓபிஎஸ் எனவும்,எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை அடித்த பணமெல்லாம் பூமிக்கு அடியில் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி மாட்டிக்கொள்வார் என்று விமர்சித்தார்.அதிமுக இணைய எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருப்பதற்கு காரணம் அவருக்கு பின்னால் யாரோ
இருக்கிறார்கள்.துரோகி என்னும் எடப்பாடி நோக்கி யாரும் செல்ல மாட்டார்கள்.எடப்பாடி உடன் கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் இன்று யாரும் இல்லை யாருடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைப்பார் என கேள்வி எழுப்பினார்.

Related posts