முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அப்துல்லா. சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருபவரான இவரது வீட்டிற்கு இன்று காலை ஒரு கும்பல் வந்துள்ளது.
என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி வீட்டிலிருந்த 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர். அதே கும்பல் பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடைக்கு சென்று அங்கிருந்த 20 லட்ச ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அப்துல்லாவிடம் இருந்து ஹவாலா பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரியவந்துள்ளது.