சென்னை பெருநகர மாநகராட்சியில் சுமார் 15 மண்டலங்கள் உள்ளது.இதில் ஐந்தாவது மண்டலத்தில் பாரி முனை, அண்ணா சாலை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 50,000 முதல் 60 ஆயிரம் கடைகள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 25 ஆயிரம் கடைகள் முறையான அனுமதி பெறாமல் உரிய வரி செலுத்தாமல் இயங்கி வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச் தெருவில் 4000 கடைகள் முறையான வரி செலுத்தாமல் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தான் ரிச் தெருவில் ஆய்வு மேற்கொண்டு சுமார் 250 கடைகளுக்கு முறையான நோட்டீஸ் அனுப்பப்பட்டு முறையான பதிலோ அல்லது வரி செலுத்தாமல் இருந்த சுமார் 120 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கடைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும்ல்லாமல் அடுத்த வாரம் அண்ணா சாலையில் உள்ள ஜிபி சாலையில் உள்ள கடைகள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்று இவர்கள் வரி செலுத்தாமல் இருப்பதால் மாநகராட்சிக்கு பெரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு மண்டலத்துக்கு இவ்வளவு வரி செலுத்தாமல் இருக்கிறது என்றால் சென்னையில் உள்ள 15 மண்டலத்திற்கும் எவ்வளவு வரி செலுத்தாமல் இருப்பார்கள் என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.