தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தனது நடிப்பின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
இவர் ஒரு மாடல் ஆக தனது பயணத்தை தொடங்கிய நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்றும் சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது நடிகர் கவினுடன் பழகியதன் மூலம் சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இதன் பின் திரைப்படங்களின் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் மக்கள் பார்வையில் இருந்து கொண்டே வந்தார் நடிகை சாக்ஷி.
இதனிடையே சமீபத்தில்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் “நான் கடவுள் இல்லை” படத்தில் முழு நீள ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டியிருந்தார். அதே போல தற்போது நடிகர் பிரபுதேவா கதாநாயகானாக நடித்து வெளியான பஹீரா திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பு மற்றும் கதாபாத்திரம் குறித்து மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது , அதுமட்டுமல்லாது திரைப்பிரபலங்களிடமும் நல்ல பெயரையே தற்போது வரை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சாக்ஷி அகர்வாலை தங்கள் படங்களில் நடிப்பதற்கு சம்மதம் கேட்டு வருவதாக தகவல் வெளிவருகின்றன. மேலும் நான் கடவுள் படத்தில் தடாலடியான ரோலில் நடித்து, பஹீரா படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து, தன் திறமையை நிரூபித்துள்ள சாக்ஷி, தொடர்ந்து ஒரே சாயலில் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் விருப்பமில்லை என தெரிவித்திருக்கிறார். சற்று வித்தியாசமான குணாதிசயங்களை கொண்ட மாறுபட்ட கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தவே சாக்ஷி விரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவர் ஒப்பந்தமாகியிருக்கும் அடுத்த திரைப்படங்களின் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியிருகும் படத்தின் தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.