ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்காக 2331 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது 4000 உதவி பேராசிரியர் காலிபணிடங்களுக்கான புதிய அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியதால் வெளியிட வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே அறிவிப்பு செய்த 2331 உதவி பேராசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது.
உயர்கல்வித்துறையில் 7000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கிற நிலையில் தற்போது திமுக அரசு படிப்படியாக உயர்கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு படியாக தான் தற்போது இந்த நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையானது தொடங்கி இருக்கிறது.