அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல செல்போன் நிறுவனமான ஐ போன், மிகவும் விலை உயர்ந்த மற்றும் அதி நவீன மேம்பட்ட பாதுகாப்பு வசதியை கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் உலகின் நம்பர் ஒன் மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் கொடுக்கப்படும் Pattern லாக் ஏன் கொடுப்பதில்லை என்று தெரியுமா ?
அமெரிக்காவில் பிரபல நிறுவனம் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில், மனித மூளையானது ஒரு முறை ஒருவர் Pattern லாக் உள்ளீடு செய்யும்போது அதை 64% சதவிகிதம் நினைவில் ஏற்றுக்கொள்ளும் திறனுடையது என்றும் மறுமுறை பார்க்கும்பொழுது 80% சதவிகிதம் வரை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை என்றும் இதுவே எண் (Passcode) உள்ளீடு செய்யும்போது அதை 11% சதவிகிதம் மட்டுமே நினைவில் கொள்ள முடியும் என்றும், மறுமுறை பார்க்கும்போது அதிகபட்சமாக 27% சதவிகிதம் நினைவில் கொள்ளம் திறன் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.
எப்பொழுதும் பாதுகாப்பு வசதிகளை முன்னிறுத்தி சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனம் இதன் காரணமாகவே ஆப்பிள் போன்களில் pattern லாக் வசதியை வழங்குவதில்லை.