கடந்த இரண்டு நாட்களாக மக்கள் மத்தியில் டாக் ஆப் டவுன்னாக இருப்பது எலான் மஸ்க் மட்டுமே.
மக்களிடத்தில் மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான ட்விட்டரை சமீபத்தில் விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். இதை வாங்கியது முதல் இருந்தே பல அதிரடி முடிவுகளை எடுத்து ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
உலகின் பணக்காரரான எலன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் இருந்து வந்தார். தற்போது ட்விட்டர் வலைதளத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல அதிரடி முடிவுகளை வெளியிட்டார். சி இஓ பராக் அகர்வால், ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரை அதிரடி நீக்கம் செய்தார். தனி ஆளாய் ட்விட்டரை நடத்துவதாக தான் மட்டுமே ட்விட்டரின் அதிகாரி எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ட்விட்டரின் ப்ளூ டிக் பயனார்களுக்கு கட்டணம் என்றும் மேலும் ட்விட்டர் ஊழியர்கள் இனி நாள் தோறும் 12 மணி நேரம் வேலை எனவும் பல பல அதிரடி முடிவுகளை தெரிவித்தார் எலன் மஸ்க்.
இந்நிலையில் தற்போது ட்விட்டர் ஊழியர்களை பலரை மெயில் மூலம் மெமோ அனுப்பி வேலை நீக்கம் செய்யப்போவதாக தெரிவித்தார்.
மேலும் ட்விட்டர் ஊழியர்கள் பலரும் தாங்கள் நிச்சயமற்ற வேலையில் இருப்பதாக வருத்தம் தெரிவித்த நிலையில் பலர் தங்கள் வேலையை தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்துள்னர். மேலும் ராஜினாமா செய்த பல ஊழியர்கள் ட்விட்டரை அதிகம் நேசித்ததாகவும் ட்விட்டர் சமூகவலைத்தளத்தை நம்பர் ஒன் ஆக மாற்றுவதற்கு தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தங்களின் உழைப்பு ஒரு முக்கிய காரணம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ட்விட்டர் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது குறித்து இன்று செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ட்விட்டர் ஊழியர் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பி அலுவலகம் வந்து கொண்டுயிருந்தால் அப்படியே திரும்பி செல்லுங்கள் என்று மெயிலில் வந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்தியாவில் ட்விட்டர், மார்க்கெட்டிங் மற்றும் தொலைத்தொடர்பு துறை பணியாளர்களை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலருக்கும் இரண்டு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை அமெரிக்க சட்டதிட்டங்களின்படி நடந்துள்ளதா என்று ஒருபுறம் கேள்வியெழுந்துள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் பணியாளர் ஒருவர் தான் இன்று பணி நீக்கம் செய்யப்பட்டேன் என்றும்
பணி நீக்கம் செய்தது தனக்கு மகிழ்ச்சி என்றும் ட்விட்டரில் தெரிவித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் தெரிவித்த ட்வீட்டில் தனக்கு இப்போதுதான் வேலை பறிபோனது மேலும் ட்விட்டருடன் பணியாற்றியது தனக்கு மிகவும் பெருமைக்குரியது எனவும் மேலும் இந்த கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததே பெரும் பாக்கியமாக கருதுகிறேன் எனவும் தெரிவித்து மேலும் அவர் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ட்விட்டர் லோகோவுடன் இருக்கும் தலையணையை அவர் கையில் வைத்துள்ளது தெரிகிறது.
மேலும் எலன் மஸ்கின் இந்த அதிரடி முடிவுக்கான காரணங்கள் ட்விட்டரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதோடு ட்விட்டரின் செலவுகளை குறைப்பதற்காகவும் எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எலன் மஸ்கின் இந்த அதிரடி முடிவுகள் அனைத்தும் ட்விட்டர் ஊழியர்களையும் சமூகவலைத்தளம் பயன்படுத்தும் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
News Credits : SAFFRA NAZREEN