27.7 C
Tamil Nadu
28 May, 2023
Sports

தமிழக வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்

போபாலில் நடைபெற்ற 6வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 6வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 12வகையான எடை பிரிவில் இந்தியா முழுவதும் இருந்து 302 வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இதில், 48கிலோ எடை பிரிவில் தமிழக வீராங்கனை கலைவாணி, 2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றவரும், இந்தியன் ரயில்வே அணியை சேர்ந்தவருமான மஞ்சு ராணியை எதிர்கொண்டார். 3 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 0-5 என்ற கணக்கில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஏற்கனவே, 2 சர்வதேச போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள தமிழக வீராங்கனை கலைவாணி, வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீராங்கனைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

See also  தமிழகத்தில் 43 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

Related posts