உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி உடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
தனது 17வது வயதில் முதல் போட்டியில் பங்கேற்ற பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, லா லிகா தொடரில் அதிக கோல்களை ( 440க்கும் மேல்) அடித்த வீரர், 36 ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார்.
மேலும் பார்சிலோனா அணிக்காக 722 போட்டிகளில் விளையாடி 629 கோல்களை அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பையில் 5 கோல் அடித்துள்ளார்.
இது தவிர தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இந்நிலையில், கத்தாரில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரோடு தனது ஓய்வை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.