27.7 C
Tamil Nadu
28 May, 2023
CricketSports

தொடரை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸிதிரேலியா மகளிர் கிரிக்கெட் அணி

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இன்று மும்பை பார்பன் மைதானத்தில் நடைபெற்ற 4 வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில்,
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் எடுத்தது

அதிகபட்சமாக ஆஸ்திரேலியா சார்பில் எல்லிசி பெர்ரி 72 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்

அதன் பின் 189 ரன்களுக்கு களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

See also  மக்களின் உணர்வை மதிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி

இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றி தொடரையும் வென்றுள்ளது

இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 20 ஆம் தேதி, இதே மும்பை பார்பன் மைதானத்தில் நடைபெறவுள்ளது

Related posts