இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது
இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது
நேற்று, முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்து இருந்தது
அதிகபட்சமாக இந்திய அணியில் சடேஸ்வர் புஜாரா 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார், அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார்
தற்போது ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாடி வருகின்றனர்