இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழந்து 278 ரன்கள் குவித்துள்ளது.
ஒரு நாள் தொடரை தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இன்று துவங்கியது.
ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி டெஸ்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும் என்ற முனைப்பில் களமிறங்கியிருக்கிறது.
காயம் காரணமாக ரோகித் சர்மா விலக கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 278 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக, சடேஸ்வர் புஜாரா 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார், அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்
வங்கதேச அணி சார்பில் டைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், மெஹிதி ஹாசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்