ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்),ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா, ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா,ராதா யாதவ், ராஜேஸ்வரி, கயக்வாட், ரேணுகா சிங், தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி வத்வானி, எஸ்.மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்),ஹர்லீன் தியோல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில், பயிற்சி பந்து வீச்சாளர்களாக மோனிகா படேல், அருந்ததி ரெட்டி, எஸ்பி போகர்கர், சிம்ரன் பகதூர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.