நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு, உலகக்கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதியது. அரையிறுதி போட்டியான இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் உடனடியாக அவுட்டானார். பின்னர் விளையாடிய வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். அவருடன் மிட்செல் கைகோர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் 53 ரன்களும், வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் அசாம், ரிஷ்வான் ஆகியோர் அதிரடி காட்டினர். இருவரும் அரைசதத்தை கடந்து அணியின் ரன்ரேட்டை கொண்டு சென்றனர். பின்னர் ரிஷ்வான் 57 ரன்களில் அவுட்டானார்.
இறுதி வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே விட்டு கொடுத்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும்.