இந்தியாவின் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-ன் மினி ஏலத்தின் தேதி மாற்றம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 ம் ஆண்டின் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ம் தேதி கேரளவின் கொச்சியில் நடைபெற இருந்த நிலையில், தேதி ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது
ஏற்கனவே டிசம்பர் 15 ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 23ம் தேதி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், ஏலம் நடத்தும் பொறுப்பு அதிகாரியை கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஒப்பந்தம் செய்ய இயலாததால் ஏலம் நடத்தும் தேதி மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது