டீமில் இருப்பதற்கு இவருக்கு தகுதியே கிடையாது சீனியர் கிரிக்கெட் வீரரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்.
பேட்டிங்கில் தொடர்ந்து சுதப்பி வரும் இந்திய வீரர் கே எல் ராகுலை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் நான்கு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் தொடரில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 132 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்துவதற்கு கடுமையான வித்தியலை கையாண்டு ஆஸ்திரேலிய அணி கடும் போராட்டத்திற்கு பின்பு 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
டெஸ்ட் போட்டிகளில் உலகின் முன்னணி அணியான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் நடைபெற்று வரும் தொடரில் இந்தியா 2-0 கணக்கில் முன்னணியில் இருப்பதால் இந்தியாவை வீழ்த்துவதில் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மூன்றாவது போட்டி வரும் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்திய அணி கடந்த இரண்டு போட்டியில் முன்னிலையில் இருந்தாலும் இரண்டு போட்டியிலும் சொதப்பிய சீனியர் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.