26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
Cricket

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா –இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களில் கே.எல்.ராகுல் 5 ரன்களும், ரோகித் சர்மா 27 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

பின்னர் இறங்கிய விராட்கோலியும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர். விராட் கோலி 50 ரன்களும், ஹர்திக் பாண்டியா 63 ரன்களும் எடுத்தனர். பின்னர் 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் கூட இழப்பு இல்லாமல் வெற்றியை எளிதாக தட்டிப்பறித்தது.

See also  பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும், ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 பந்துகளும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

Related posts