பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி உலக்கோப்பையை வென்று அசத்தியது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் முன்னேறியது. அதன்படி இன்று மெல்போர்னில் நடைபெற்ற இறுதி போடியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.
அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 32 ரன்களும், ஷான் மசூத் 38 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் பட்லர் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹாரி புரூக் 20 ரன்கள் எடுத்தார்.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி 52 ரன்கள் எடுத்ததோடு, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் அந்த அணி 19 ஓவர்களில் 138 ரன்களை எடுத்து உலகக்கோப்பையை வென்றது. 2010-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனைபடைத்துள்ளது.