27.7 C
Tamil Nadu
28 May, 2023
Sports

அர்ஜூனா விருதுக்கு செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதுக்கு, செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை சதுரங்க கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கி வருபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு செஸ் இளம் வீரர் பிரக்ஞானந்தா பெயரை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கல பதக்கத்தை பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா 3 முறை வீழ்தியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையேயான செஸ் போட்டியில் தங்கம் வென்றார்.

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் பிடே ரேட்டிங்கில் 2678 புள்ளிகளை கொண்டு, இந்திய சதுரங்க வீரர்களின் தர வரிசையில் 6 வது இடத்தில் பிரக்ஞானந்தா இடம் பெற்றுள்ளார். இதனால், பிரக்ஞானந்தாவின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டு வீரர்கள் 4 பேர் அர்ஜூனா விருதை பெற்றுள்ளனர்.

See also  கொளத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை - உயிரிழந்த கால்பந்து வீராங்கனை...

Related posts