உலக கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மெஸ்ஸியின் அர்ஜென்டினா
கத்தாரில் நடைபெற்று வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி குரோஸியா அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது.
இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
அதேபோல், உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி. 10 கோல்கள் அடித்த பட்டிஸ்டுட்டாவின் சாதனையை நேற்று முறியடித்தார்