பிரபல எழுத்தாளரும் தமிழ் சினிமாவின் ஏராளமான படங்களுக்கு கதை அமைத்த வருமான ஆரூர் தாஸ் சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவில் ஏராளமாக படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். குறிப்பாக எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் படங்களுக்கு அதிக அளவில் கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 500 திரைப்படங்களுக்கு மேல் இவர் பணியாற்றியுள்ளார்.
அவருக்கு வயது 91. இன்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். ஆரூர் தாசுக்கு ரவிச்சந்தர் என்ற மகனும் தாராதேவி மற்றும் ஆசாதேவி என்ற மகள்களும் உள்ளனர்
நாளை ( நவம்பர் 21, திங்கட்கிழமை ) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்