27.7 C
Tamil Nadu
28 May, 2023
World

62 மணி நேரத்திற்கு பின் உயிர் பிழைத்த பெண்.. உயிருக்காக போராடும் துருக்கி மக்கள்!!

துருக்கி: துருக்கியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு 62 மணி நேரத்திற்கு பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.காசியன்டெப் என்ற இடத்தில் கட்டிட குவியல்களை அப்புறப்படுத்தியபோது பெண் உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு குழுவினர் அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துருக்கியின் ஹாட்டி மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் பள்ளம் காணப்படுகிறது. வான் வழி காட்சியை பார்க்கும் போது இதனை சரி செய்ய பல வருடங்கள் ஆகும் என்பது தெளிவாகிறது.

இதுபோன்று கட்டிடங்கள் இடிந்து தூள் தூளாக காணப்படுகிறது. இதிலிருந்து எவரேனும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், மீட்பு குழுவினர் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். ஊரே தூள் தூளாக மாறிய நிலநடுக்க வான்வழி காட்சிகளால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

See also  திமுக அவர்களது கட்சியினர் மாட்டை மட்டும் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடுகின்றனர் இதற்கு அறிவாலயம் என்று பெயரை போட்டுக்கொண்டு அவர்கள் ஜல்லிகட்டை நடத்திருக்கலாம் என சசிகலா குற்றச்சாட்டு

Related posts