சிக்கிம் ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த 16 பேரில் 1 ராணுவ வீரர் கேரளாவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியாகியுள்ளது.
நேற்று வடக்கு சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து 16 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களில், 3 வீரர்கள் ராஜஸ்தான், 3 ஹரியானா, 5 பேர் உத்திரபிரதேசம், 2 பேர் பீகார், மேற்கு வங்கம், பதான்கோட் மற்றும் கேரளா பாலக்காட்டை சேர்ந்த தலா 1 ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்த 16 வீரர்களின் உடலும் இன்று நண்பகல் 12.30 மணிக்குள் மேற்குவங்கம் மாநிலம் பாக்டோக்ரா விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர், ராணுவ மரியாதையுடன் அவரவர் சொந்த மாநிலம் கொண்டு செல்லப்படும்.
பாலக்காட்டை சேர்ந்த உயிரிழந்த ராணுவ வீரர் வைஷாக் உடல் சென்னை அல்லது கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யபட்டுள்ளது.