கிறிஸ்துமஸை முன்னிட்டு மல்லிகை கிலோ 2500₹ விற்பனை ஆகி வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது
மதுரை மல்லிகையின் கிலோ ரூ. 2500 பிச்சிப்பூ ரூ.1300, முல்லைப்பூ ரூ.1500 சம்பங்கி ரூ.150 , பட்டன் ரோஸ் ரூ.200, செண்டுமல்லி ரூ.70 ₹ கனகாம்பரம் ரூ.1000, அரளிப்பூ ரூ.200 செவ்வந்தி ரூ.150 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று மதுரை மல்லிகை பூ 1500 க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குளிர் காலம் என்பதால் மதுரை மல்லிகை பூவின் வரத்து குறைந்து பூ தேவை அதிகரித்து இருப்பதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.