பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தற்கொலை படைதாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. விஷாகரில் உள்ள மசூதியில் வழக்கம் போல இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் தன் உடம்பில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.
இந்த தற்கொலை படை தாக்குதலில் மசூதியில் பெரும் பகுதி சேதம் அடைந்து சுமார் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாகவும் மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
دھماکہ خودکش تھا، پہلی صف میں موجود بمبار نے نماز کے دوران خود کو اڑا لیا، سیکیورٹی حکام#Peshawar pic.twitter.com/lvYM82Iqoz
— Khurram Iqbal (@khurram143) January 30, 2023