27.7 C
Tamil Nadu
28 May, 2023
World

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நெஞ்சை உருக்கும் சம்பவம்

இயற்கையின் சீற்றத்திற்கு ஆளான துருக்கியின்நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. கஹ்ராமன்மராஸ் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் காஜியான்தெப், ஹடாய், கஹ்ராமன்மராஸ், தியர்பாகிர் உள்ளிட்ட 10 மாகாணங்களிலும், அண்டை நாடான சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள அலெப்போ மற்றும் ஹமா நகரங்களிலும் சுமார் 330 கிமீ சுற்றளவுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பல கட்டிடங்கள் மண்ணில் புதைந்து மக்கள் பலரும் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 24,400 பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு கடுங்குளிரிலும் நடந்த மீட்புப் பணியில், கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களை விட கொத்து கொத்தாக சடலங்களே கிடைத்தன.

See also  முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோவை காட்டி பல்லாயிரம் கோடி ஆட்டையை போட்ட ஹிஜாவு நிறுவனத்தின் மோசடி குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

Related posts