27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsTamilnadu

கோயில்களின் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன?- அறிக்கை கேட்கும் அறநிலையத்துறை

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? என்பரை அறிக்கையாக சமர்பிக்கை இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது

அதன்படி, முதலில் சைவக் கோயிலா அல்லது வைணவக் கோயிலா ? எனத் தொடங்கி பல்வேறு விவரங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது ?வரலாற்றுக்கு முற்பட்டதா ? பிற்பட்டதா ?

கோயிலில் கருவறை உட்பட எத்தனை சந்நிதிகள் உள்ளன ? மூலவர் எத்திசை நோக்கி இருக்கிறார் ?

கோயில் கட்டுமானம் எந்த ஆகமத்தைச் சேர்ந்தது ? எந்த ஆகமத்தையும் சாராத பக்தி கோயிலா ?

கோயில் பூசாரிகள் முறையாக ஆகமப்படி மேற்கொண்டவரா ?

கோயில் வடகலையைச் சார்ந்ததா ? தென்கலையைச் சார்ந்ததா ?

என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் அனுப்ப மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

See also  அறநிலையத்துறையில் போலி நியமனம்? - நிச்சயம் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

Related posts