சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தினம்தோறும் வழங்கப்படும் குடிநீரில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தற்போது வரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வாரியம் சார்பில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு 10 லட்சத்து 40 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
வீடு தோறும் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொற்றுநோய் பரவாமல் இருக்க ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை.
பருவ மழை காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும்.
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வரும் நிலையில். தேவைக்கு அதிகமான குடிநீரை பொதுமக்கள் சேமித்து வைக்க வேண்டாம்.