27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsWeather

கடுமையான மூடுபனி – 4 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

வட மாநிலங்களில் அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர், டிசம்பர் போன்ற உள்ளிட்ட மாதங்களில் தென் மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகமிருக்கும் என்றால், தென் மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை , அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி சூழ்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடர்ந்த மூடுபனியின் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் பார்வைத் திறன் குறைவாக உள்ளது.

பெரும்பாலன வாகனங்கள் லைட் உதவியுடனே செல்கின்றன.

டெல்லியை பொறுத்தவரை பாலம் பகுதியில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, பார்வைத் திறன் வெறும் 25 மீட்டர் அளவிலும் , சப்தர்ஜங் பகுதியில் 50 மீட்டர் வரையான அளவிலும் பதிவுவாகியுள்ளது

See also  அதிமுக எனும் கடலை, குட்டை போல் ஆக்கிவிட்டனர் - டிடிவி தினகரன் விமர்சனம்

மற்ற நகரங்களை பொறுத்தவரை , அமிர்தசரஸ், கங்காநகர், பாட்டியாலா மற்றும் லக்னோவில் 25 மீட்டர் பார்வை அளவவும் .பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில், மிக அடர்த்தியான மூடுபனியால் பார்வைத்திறன் 0 ஆக குறைந்தது.

இதையடுத்து , பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் இன்றும், நாளையும் அடர்த்தியான மூடுபனி காரணமாக , சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசமான பனிமூட்டத்தால் , சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் தெருக்களில் வாகனங்கள் எச்சரிக்கையுடன் ஓட்டிச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts