தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களோடு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொள்கிறார்
தமிழ்நாட்டில் தற்போது வரை மூன்று கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்