அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க தென்னக இரயில்வே மதுரை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை – போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை – தேனி வரை பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது
தேனி – போடிநாயக்கனூர் இடையேயான 15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன
இந்த புதிய ரயில் பாதையில் ஏற்கனவே ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது
தேனி – போடிநாயக்கனூர் புதிய அகல ரயில் பாதையில் டிசம்பர் 2 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 120 கிமீ வேகத்தில் ரயில் இன்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
எனவே அதி வேக சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள ரயில் பாதையை பொதுமக்கள் நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.