27.7 C
Tamil Nadu
28 May, 2023
TamilnaduVehicle

பைக்கில் அதிவேகம் – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Court

இரு சக்கர வாகனங்களில் சாகசம் மற்றும் அதிவேகத்தில் ஓட்டுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும்,

இதுபோல வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டுனர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுத்தல், உரிய அனுமதியின்றி பைக்-களை மாற்றியமைத்து பயன்படுத்துவதை தடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

See also  கோயில்களின் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன?- அறிக்கை கேட்கும் அறநிலையத்துறை

Related posts