அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் அமைந்திருக்கும், அம்பேத்கரின் உருவ சிலைக்கு மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்திதித்து பேசிய வைகோ, இந்தியாவிற்கு ஒரு சிறப்பான அரசியல் சட்டத்தை வகுத்து கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர். ஆனால் இன்றைய அரசியல் கட்டத்தில் அவருடைய நினைவு தினத்தன்று , அம்பேத்கர் வகுத்த விதிகள் அனைத்தையும் குழித்தோண்டி புதைக்கும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். மேலும் அவரிடம் இல்லாத அதிகாரங்களை அவரே கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும் அம்பேத்காரின் கனவுகள் நினைவாக வேண்டுமென்றால் தமிழகத்தில் இருந்து ஆளுநரை முதலில் வெளியெற்ற வேண்டும். மத்திய அரசும் ஆளுநரை தமிழகத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். அம்பேத்கர் நாட்டு மக்களுக்காக வகுத்து கொடுத்த சட்டங்கள் மிகவும் மகத்தானது. அதனுடன் உலக நாடுகள் அனைத்திற்கும் ஆலோசனை வழங்கக்கூடிய ஆற்றல்மிக்கவர். அவரின் ஆட்சிக்காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் பல சட்டங்களை இயற்றியவர். அவரின் புகழ் எந்த காலத்திலும் அழியாது என வைகோ கூறியுள்ளார்.