உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட டாக்-1 மெக்ஸ் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த சுகாதாரத்துறையினர், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக 21 குழந்தைகள் டாக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை சிகிச்சையின் பொழுது அருந்தினர். இதில் 18 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனுடன் மேலும் வெளியாகி இருக்கும் தகவல் ஒன்றில் இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரை இன்று அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்ததே உயிரிழப்புக்கு பெரும் காரணமாக இருக்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இந்த இருமல் மருந்தில் எத்திலீன் மற்றும் கிளக்கால் போன்ற ரசாயனம் கலந்திருப்பதால் இதுவும் ஒரு வகையான குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது
இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய மரியான் பயோடெக் நிறுவனம் தயாரிய்த்த டாக்-1 மேக்ஸ் மருந்தை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.