ரெட் ஜெயண்ட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரோடு இனி உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவீஸ்.
இந்த நிறுவனத்தை கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது தயாரிப்பது மட்டும் அல்லாமல் பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது
இந்த நிலையில் நிறுவனத்தின் லட்சினை (logo) ரெட் ஜெயன்ட் மூவீஸ்.. உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என இருந்து வந்தது எந்த படம் தயாரித்தாலும் விநியோகித்தாலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என பெயரிடப்பட்டு போஸ்டர்கள் வெளியாகும் என்பது வழக்கமான ஒன்றுதான்.
தற்போது இந்த நிறுவனத்தின் லட்சினை (logo)ரெட் ஜெயன்ட் மூவிஸ் மட்டுமாக மாற்றப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலினின் பெயர் எடுக்கப்பட்டுள்ளது
டிவிட்டர் பக்கத்திலும் சுய விவர படத்திலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியான போஸ்டர்களிலும் லட்சினை logo மாற்றப்பட்டுள்ளது.
உதயநிதி அமைச்சரானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.