கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டபேரவை தேர்தலில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து திமுகவில் பணியாற்றி வரும் மற்றத்துறையை சார்ந்த அமைச்சர்களும், திமுகத் தொண்டர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் வருகிற 14 ஆம் தேதி அன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்வது குறித்த கடிதத்தை ஆளுநர் மாளிக்கை அனுப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. உதயநிதி அமைச்சராக பொறுப்பெற்று கொள்ள இருக்கும் நிலையில் அவருக்காக தலைமை செயலகத்தில் புதிய அறையை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பாக எந்த துறைக்கு அமைச்சராகப்போகிறார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகத போதிலும் அவருக்கு இளைஞர் நலன் கருதி விளையாட்டு துறையை கொடுப்பதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.