26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
NewsPoliticalPuducherryScienceTamilnaduWorld

நம்பர் பிளேட் இல்லாத காரை ஓட்டி வந்த டி.டி.எஃப் வாசன்! – போலீசாரிடம் சிக்கியதால் பரபரப்பு!



கோவை மாவட்டத்தை சேர்ந்த டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனத்துல் ஊர் ஊராக பயணம் மேற்கொண்டு தனது அனுபவத்தை யூடுடூபில் பதிவேற்றுவது வழக்கம். இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் , சமீபத்தில் அதிகவேகமாக வாகனம் ஓட்டும் சர்ச்சையில் டிடிஎஃப் வாசன் போலிசாரிடம் சிக்கியிருந்தார்.

டிடிஎஃப் வாசனை எங்கு வெளியில் பார்த்தாலும் அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கடலூர் பகுதியில் திரைப்பட இயக்குனரின் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைப்பதற்காக டிடிஎஃப் வாசன் வந்திருந்த நிலையில் , அவரை காண ஏராளமாக பைக் பிரியர்கள் படையெடுத்து வந்ததால் போக்குவரத்து அப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த அவரது ரசிகர்களை விரட்டியடித்தனர். இந்நிலையில் இன்று டிடிஎஃப் வாசன் திரைப்படத்தின் முன்னோட்டம் காட்சியை காண வடபழனியில் உள்ள கமலா திரையரங்கிற்கு கார் ஒன்றில் வந்துள்ளார்.

டிடிஎஃப் வாசன் நம்பர் பிளேட் இல்லாத காரை ஓட்டி வந்ததை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் போக்குவரத்து போலீசார் அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்துள்ளனர், இதையடுத்து காவல்துறை தரப்பில் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வாகனத்திற்கு உரிய நம்பர் பிளேட் மாற்றிய பின் எடுத்து செல்லுமாறும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

See also  மெரினாவில் கெத்து காட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு

Related posts