தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு துவங்கியது
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க ரூ. 500 கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்கெட்களை annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோயில் இணையதள முகவரியில் இன்று காலை 10 மணி முதல் பதிவு செய்யலாம்.
ஆன்லைன் டிக்கெட் பெற ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபத்திருவிழா பற்றிய விவரங்களை 1800 425 3657 என்ற எண்ணிலும் அறிந்து கொள்ளலாம் என்றும், ஆன்லைன் மூலம் நன்கொடை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.