பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்கக் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை மாநரில் குப்பைகளை லாரிகள் மூலம் சேகரித்து குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அவ்வப்பொழுது இயக்கப்படும் குப்பை லாரிகள் காலை முதலே தொடங்கப்பட்டு இரவு வரையும் குப்பைகளை சேகரித்து வருவர். இதனிடையே காலை நேரங்களில் குப்பை லாரிகளால் பள்ளிக்கு செல்வோர்களும் , பணிக்கு செல்வோர்களும் பாதிக்கபடுவதாக கூறி கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே வெளிநாடுகளில் எல்லாம் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதனை போல சென்னையிலும் இரவு நேரங்களில் மட்டுமே இயக்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் , அதுபோன்று சூழல் நிலவினால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்காது எனவும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததன் அடிப்படையில் நீதிபதிகள் குப்பை லாரிகளை இயக்குவதற்காக மட்டும் தனியாக ஒரு நேரத்தை நிர்ணயிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.