26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
IndiaNewsPolitical

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றியை வழங்கியதற்கு நன்றி – ஆம் ஆத்மி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கியதற்கு ஆம் ஆத்மி கட்சி டெல்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளது

250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களுக்கும் மேலாக கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.

இதற்கு டெல்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ள டெல்லி முதலமைச்சரும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இனி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.

டெல்லி மாநில துணை முதல்வர் மணி சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உலகத்திலேயே மிகவும் எதிர்மறையான சிந்தனைகளை கொண்ட கட்சியை வீழ்த்திருப்பதாகவும் உண்மையில் இது வெறும் வெற்றியாக மட்டுமில்லாமல் மிகப்பெரிய பொறுப்பாகவும் தாங்கள் பார்ப்பதாக கூறியுள்ளார்.

See also  நாடாளுமன்ற தேர்தல் - கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன் ஆலோசனை...

15 ஆண்டு காங்கிரஸ் டெல்லி ஆட்சியையும் 15 ஆண்டு l மாநகராட்சி ஆட்சியையும் கேஜ்ரிவால் வேரோடு அகற்றியுள்ளார் டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை அதற்கு மாறாக பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் மின்சாரம் தூய்மை கட்டமைப்பு ஆகியவற்றை விரும்புகிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவத்மான் கூறியுள்ளார்

Related posts