ஆய்வின்போது கடைகளில் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளதாவது :
பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களுக்கு பதிலாக வெளிநபர்கள் பணியாற்றுவதாக புகார் எழுந்து வருகிறது.
டாஸ்மாக் கடை பணியாளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டமோ அல்லது போராட்டத்திலோ கலந்து கொள்ள செல்வதால் கடைகளில் பணியாளர்கள் இல்லை என்ற புகார் தொடர்ந்து வருகிறது
டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு அல்லது வங்கி பணிகளுக்கோ செல்லும் போது உரிய அனுமதி பெற்று பணியாளர்கள் செல்ல வேண்டும்
டாஸ்மாக் நிறுவனத்திற்கோ, நற்பயிருக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.