தமிழக அரசின் உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற கூடாது என பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் பொழுது ,உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக முன்வைக்கப்பட்ட வாதங்களானது, ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு, இவை நடைமுறைக்கு வேண்டுமா, இல்லையா என்பதனை நீதிமன்றத்தால் மட்டும் எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்றது.
போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே , போட்டிக்கு தயாராகும் காளைகள் முழுவதுமாக பரிசோதித்து பார்த்து தான் அனுப்பப்படுகின்றனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை சுலபமாக விளையாடும் அளவிற்கு தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வகுக்கவில்லை எனவும் வாதிட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நிகழும் பொழுது புகைப்படங்கள் எடுப்பதற்கான உரிமையை யாரிடம் பெற்றீர்கள் , விதிமுறைகள் நடப்பதாக சொல்கிறீர்க்ளே அது குறித்து எவரிடத்தில் புகார் அளித்துள்ளீர்கள்? இதனை வைத்து மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்வதற்கான ஒரு முடிவை எடுக்க முடியுமா என பீட்டா அமைப்பினருக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்திருக்கிறது.