விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது….
இதில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன், திரைப்படத்தின் நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படத்தின் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் சாந்தனு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் ரவி தேஜா, நடிகர் உதயநிதி ஸ்டாலின், தாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்….
திரைப்படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் செய்தியாளர்களிடம் பேசியது…
என் வாழ்க்கையில் பெரிய பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட படம் இது என்றும் இது ஒரு காமெடி நிறைந்த குடும்ப படமாக இருக்கும் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து சந்தோஷமாக இருக்கலாம் விளையாட்டு சோகம் மற்றும் கணவன் மனைவி இடையே நடக்கும் ஈகோ சண்டையை வைத்து மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது, ரொம்ப நாட்கள் ஆகிறது குடும்ப படம் வந்து டிசம்பர் இரண்டாம் தேதி திரையில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது அனைவரும் பாருங்கள் என்று கூறி பேட்டியைப் முடித்துக் கொண்டு சென்றார்….
படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களிடம் பேசியது….
நான் பண்ண வேண்டிய படம் இல்லை இது, 5 மாதங்கள் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன், இது ஒரு மகிழ்ச்சியான படம் என்று கூறிய அவர் நாங்கள் நடிக்கும் போது எப்படி சந்தோசமாக இருந்தோமோ நீங்கள் படம் பார்க்கும் போது அப்படி தான் இருக்கும் என்று கூறினார்…
வெண்ணிலா கபடி குழுவில் நான் அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷாலின் வளர்ச்சி பெருமையாக உள்ளது. வாரிசு படம் விவகாரத்தில் தெலுங்கு இண்டஸ்ட்ரி எடுத்துள்ள நிலைப்பாடு தவறானது. தற்போதைய சூழலில் ஒரு மொழியில் வெளியிடப்படும் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்று ஹிட் ஆகிறது,மொழி என்ற வட்டத்திற்குள் அடங்காமல் சினிமா பறந்து விரிந்தது. தமிழகத்தில் பாகுபலி காந்தாரம் போன்ற படங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வதைப் போல பிற மாநிலத்தவர்களும் தமிழ் படங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேச வந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்…..
ஆந்திராவில் தமிழ் படமான வாரிசு படம் ரிலீஸ் ஆகுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு….
தெலுங்கு இண்டஸ்ட்ரியல் நான் இல்லை, தெலுங்கு இண்டஸ்ட்ரியல் நான் எப்படி பேச முடியும் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவிச் சென்ற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்….