27.7 C
Tamil Nadu
28 May, 2023
EducationIndiaJobsPoliticalTamilnaduViral

பெண்களுக்கான பாதுகாப்பிற்காக இது – பல்கலைக்கழக மானிய குழு !

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது பல்கலைக்கழக மானிய குழு

அதன்படி,கல்வி நிறுவனம் சார்பில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும்

கல்லூரியில் சேரும் போதே மாணவிகளுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண் கொண்ட கையேடுகள் வழங்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்

கல்வி நிறுவன வளாகம், மற்றும் விடுதி வளாகத்தை சுற்றிலும் மதில் சுவர் அமைத்து அந்நியர்கள் நுழைவதை கண்காணித்து தடுக்க வேண்டும்

மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்களை பணி அமர்த்த வேண்டும்

வகுப்பறைகள் மற்றும் விடுதிகள் பூங்காக்கள் ,வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் இருட்டு இல்லாதவாறு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்

24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

பாலியல் தொந்தரவு குறித்த விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் நடத்தப்படும் கணக்கெடுப்பில் மாணவிகள் மற்றும் பெண்ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்

See also  பிக்பாஸ் சீசன் 6 :- எல்லா வேஷம் போட்டாலும் உண்மை முகம் வெளிய தெரிஞ்சு தான் ஆகனும்..! கவனம் ஈர்க்கும் கமலின் ப்ரோமோ..!

Related posts