26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
EducationIndiaPoliticalScienceTamilnadu

புதிய கல்விக் கொள்கை 2020ன் படி- 4 ஆண்டு ஹானர்ஸ் படிப்பு என்றால் என்ன ?

உயர்கல்வியில், புதிய கல்விக் கொள்கை -2020(NEP) நடைமுறைப்படுத்தும் வேளையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் 4 ஆண்டு இளநிலை ஹானர்ஸ் படிப்பை UGC அறிமுக படுத்தி உள்ளது.

நான்கு ஆண்டு இளநிலை படிப்பில், முதல் ஆண்டு (2-செமஸ்டர்கள்) படித்தால் சான்றிதழ் படிப்பிற்கான (certificated course) தகுதி வழங்கப்படும்.

2 ஆண்டுகள் (4-செமஸ்டர்கள்)படித்தால் படயச்சான்றிதழ் (Diploma certificate) வழங்கப்படும்.

3 ஆண்டுகள் (6-செமஸ்டர்கள்) படித்தால் இளநிலை பட்டம் (UG-Batchloer degeree) வழங்கப்படும்.

4 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்)படித்தால் கௌரவ இளநிலை பட்டம் (degeree with honours) வழங்கப்படும்.

மேலும் மாணவர்களுக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கான ஹானர்ஸ் பட்டமும் வழங்கப்பட உள்ளது.

முதல் 6 செமஸ்டர்களில் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்கள் ஆய்வு படிப்பை மேற்கொள்ள விரும்பினால், 4வது ஆண்டில் சேரலாம். 
4 ஆண்டு முடிவில் 160 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும்.

See also  பர்தா அணிந்து நடனமாடிய கல்லூரி மாணவர்கள் - சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

இளங்கலை படிப்பில் 40 மதிப்பெண்களுடன் முதலாம் ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் முதலாமாண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்.

அதே போல், 80 மதிப்பெண்களுடன் 2வது ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் 2வது ஆண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 4 ஆண்டு இளநிலை படிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.

நான்கு ஆண்டுகள் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டாலும், மூன்று ஆண்டுகள் நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தில் புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

See also  ட்விட்டரில் இன்று முதல், மீண்டும் “புளூ டிக்” வசதி தொடக்கம்..!

Related posts