உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதிவேற்ற பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் அவருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கான அறைக்கு வந்தார்.
அப்போது மூன்று கோப்புகளில் முதல் கையெப்பமிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
அதில் 47கோடியே 4லட்சத்து 72ஆயிரத்து 800 கோடி ரூபாயை முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து கையெழுதிட்டார், அதில் இதுவரை பத்து பிரிவுகளில் நடத்தபட்ட விளையாட்டுகள் தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளான கபடி, சிலம்பத்தை உள்ளடக்கி 16 பிரிவுகளாக நடத்தபடுமெனவும், அதில் மாற்றுதிறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் மேலும் இந்த போட்டிகள் மாவட்ட மாநில அளவில் போட்டிகள் நடத்தபட உள்ளது.
2 வதாக நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுகான மாத ஓய்வுதிய தொகை 3000 ரூபாயிலிருந்து, 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்கட்டமாக 9 வீரர்களுக்கு வழங்கி கையொப்பமிட்டார்.
3வதாக பெரு நாட்டில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் உலக சாம்பியன் ஷிப் பெண்கள் பிரிவில் வெள்ளி பதக்கம் பதக்கம் வாங்கிய கோயமுத்தூர் மாவட்டத்தை சார்ந்த வீராங்கனை நிவேதிதாவிற்கு 4 லட்சம் ரூபாய்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்…