27.7 C
Tamil Nadu
28 May, 2023
PoliticalTamilnadu

நீதிமன்றத்தில் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் கூட மக்கள் ஏற்க்க மாட்டார்கள் – டிடிவி.தினகரன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்த கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை இராயப்பேட்டையில் அமமுக தலைமைக் கழகத்தில் நடைப்பெற்றது.


அப்போது, இதய தெய்வம் அம்மா பேரவை மாநில நிர்வாகிகள்- மாவட்ட செயலாளர்கள் உடனான கூட்டத்தில்
கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

அப்போது, பேசிய அவர் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தேரந்தெடுக்கப்பட்ட பிறகு என்னை கழக பேரவை செயலாளாரக அறிவித்தார்கள் தமிழகம் முழுவதும் பேரவையை வலிமைப்படுத்த வேண்டும் என அம்மா என்னிடம் கூறினார்.

சாதி,மதம் என்ற பிரிவை பார்க்க மாட்டேன் விருப்பு வெறுப்போடு செயல்பட மாட்டேன் தனிப்பட்ட காரணங்களாக யாரையும் ஒதுக்க மாட்டேன் என தெரிவித்தார்.

சுய நலத்திற்காக பதவி ஆசைப்பட்டவர்கள், பணம் ஆசைக்கொண்டவர்கள் எல்லாம் சென்று விட்டார்கள்,தற்போது உள்ளவர்கள் உண்மையான தொண்டர்கள் என்றார் மேலும்,அதிமுக வை ஜனநாயக முறைப்படி தான் மீட்டெடுக்க வேண்டும்

See also  பாஜகவை கண்டித்து நடைப்பயணம் மேற்கொள்ளும் காயத்ரி ரகுராம்! - வைரலாகும் டிவிட்டர் பதிவு!

எடப்பாடி போல கொடுக்க வேண்டியதை கொடுத்து தவறான வழியில் செல்லக்கூடாது நாம் முயற்சி செய்து நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அமமுக சின்னத்தை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும் மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து
கட்சியை வலுப்படுத்த வேண்டும்..

நீதிமன்றத்தில் பழனிசாமி க்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் கூட மக்கள் ஏற்க்க மாட்டார்கள் பழனிசாமியால் ஏன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை பணம் ஓரளவு தான் செல்லும் மிகப்பெரிய கட்சியை வட்டார கட்சியாக, ஒரு சமுதாய கட்சியாக மாற்றியுள்ளார் பழனிசாமி என தெரிவித்தார்.

Related posts