கடந்த ஒரு மாதகாலமாகவே உற்பத்தி மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி மட்டும் இன்றி அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது…
குறிப்பாக தக்காளி விலை கடுமையாக சரிந்து வருகிறது.வழக்கமாக ஒரு நாளைக்கு 40 வண்டி தக்காளி லோடுகள் வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக 60 முதல் 70 வண்டி லோடுகல் வருவதாகவும் வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொதுவாக நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திர கர்நாடக தெலுங்கானாவில் உள்ள பகுதிகளிலும் மலை இருக்கும் என்பதால் விளைச்சல் பாதிக்கப்படுவதால் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படும் ஆனால் இவ்வாண்டு போதிய அளவு மழை இல்லாததால் நல்ல விளைச்சல் இருந்ததன் காரணமாக வரத்து அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மழை இல்லாத பட்சத்தில் இன்னும் சில வாரங்களுக்கு தக்காளியின் விலை குறைந்தே தான் காணப்படும் என்றும் மற்ற காய்கறிகளின் விளையும் இதே நிலையில் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதனால்,நாட்டு தக்காளி கிலோ 10 ரூபாய்க்கும் நவீன தக்காளி கிலோ 14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலை கடும் சரிவை கண்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு இது பெரும் பாதிப்பாக உள்ளது.